[X] Close

படகுகளை விடுவிக்க இலங்கை பரிசீலனை

India---Srilanka-Fisherman-Issue

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.


Advertisement

மீனவர் பிரச்னை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சார்பில் அமைச்சர் ராதாமோகன் சிங்கும், இலங்கை சார்பில் மஹிந்த அமரவீரவும் கலந்து கொண்டனர். இரு நாடுகள் பிடியில் உள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்க வசதியாக நிலையான நடைமுறை ஒன்றை உருவாக்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடல்பகுதியில் மேற்கொள்ளப்படும் ரோந்துப்பணியில் இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், இந்திய இலங்கை கடலோர காவல்படைகளுக்கிடையில் சீரிய இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இருநாட்டு கடற்படையோ, கடலோர காவல்படையோ கைது நடவடிக்கை எடுக்கும்போது மீனவர்கள் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு ஏற்படக்கூடாது எனவும் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கவேண்டும் என இந்தியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என இலங்கையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Related Tags : fisherman india srilanka tamilnadu

Advertisement

Advertisement
[X] Close