தலைப்புச் செய்திகள்|இடைக்கால ஜாமீனில் வெளியேவந்தார் கெஜ்ரிவால் To சவுக்கு சங்கரின் இல்லத்திற்கு சீல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, கெஜ்ரிவாலுக்கு பிணை அளிக்கப்பட்டது முதல் சவுக்கு சங்கரின் இல்லம், அலுவலகத்திற்கு சீல் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • சென்னையை தவிர இதர மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  • சிவகாசியில் பெயரளவில் மட்டுமே தொழிலாளர்களுக்கான பயிற்சி மையம் செயல்படுகிறது என புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் உண்மை வெளியாகியுள்ளது.

  • விருதுநகரில் சட்டவிரோத பட்டாசு ஆலைகளை கண்டறிய 4 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விளக்கம். மேலும், விதிகளை மீறும் ஆலை உரிமையாளர்கள், ஃபோர்மேன் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கை.

  • யூடியூபர் சவுக்கு சங்கரின் மதுரவாயல் இல்லம், தியாகராய நகர் அலுவலகத்திற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.மேலும், வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • மதுரையில் கனமழை காரணமாக சாலையில் அறுந்து தொங்கிய மின்சார கம்பியில் சிக்கி, பைக்கில் சென்ற கணவன், மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது.

  • டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள 8 நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

  • திகார் சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. இந்நிலையில், சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டும் என கெஜ்ரிவால் அழைப்புவிடுத்துள்ளார்.

  • பொதுபிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கத் தயார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு.

  • ஐ.நா. உறுப்பினராக பாலஸ்தீனத்தை சேர்த்துக்கொள்ளும் தீர்மானம் பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு.

  • ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் அணியிடம் பணிந்தது சிஎஸ்கே.அடுத்த 2 போட்டிகளிலும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com