10 தொழிலாளர்களின் உயிரை பறித்த சிவகாசி - செங்கமலப்பட்டி பட்டாசு விபத்து; FIR-ல் அதிர்ச்சி தகவல்!

பத்து தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய சிவகாசி - செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில், சம்பந்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்த விதமே சட்டவிரோதம் என, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கமலப்பட்டி பட்டாசு விபத்து
செங்கமலப்பட்டி பட்டாசு விபத்துபுதிய தலைமுறை

பத்து தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய சிவகாசி - செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில், சம்பந்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்த விதமே சட்டவிரோதம் என, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழதிருத்தங்கல் அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் ஸ்ரீசுதர்சன் ஃபயர் ஒர்க்ஸ் ஆலையில் நேரிட்ட விபத்து பற்றி, சிவகாசி கிழக்கு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வி.ஏ.ஓ. சங்கிலிபிரபு அளித்த புகாரில், பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், குத்தகைதாரர் முத்துக்கிருஷ்ணன், போர்மேன் சுரேஷ் ஆகியோர் மீது, வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 பிரிவுகள் பாய்ந்துள்ளன.

பட்டாசு ஆலை நடத்த, திருத்தங்கல் - ஸ்டேண்டர்டு காலனியைச் சேர்ந்த சரவணன் தான், நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையிடம் உரிமம் பெற்றுள்ளார். ஆனால், ஆலையை அவர் நடத்தாமல் வம்பிழுத்தான்முக்கு பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணனுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். இதுவே சட்டவிரோதம் என முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

ஆலையின் ஒவ்வொரு அறையிலும் தனித்தனியே 4 பேர் வரை மட்டுமே இருந்து வேலை செய்யலாம். அறையின் 4 புறமும் வாசல் இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு அறையையும் தனித்தனியே 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக குத்தகைக்கு எடுத்துள்ளார் முத்துக்கிருஷ்ணன். இந்த அறைகளில் மட்டுமின்றி, மரத்தடியிலும்,தொழிலாளர்களை அமரவைத்து வேலை செய்ய வைத்துள்ளனர்.

மரத்தடியில் வைத்து வேலை செய்யக்கூடாது. தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படவில்லை என்றும், உராய்வினால் தான் விபத்து நேரிட்டதாகவும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இந்தப் பணிகள் எல்லாம் போர்மேன் சுரேஷின் மேற்பார்வையில் நடந்துள்ளது.

செங்கமலப்பட்டி பட்டாசு விபத்து
ஓடும் ரயிலில் இருந்து தவறிவிழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்.. ரயில்வே கொடுத்த புதிய தகவல்!

மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்திருந்தும், போதிய பாதுகாப்பு சாதனங்கள் கொடுக்காமல் பட்டாசுகளை தயாரிக்க வைத்ததாகவே, மூவர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. ஸ்ரீசுதர்சன் ஃபயர் ஒர்க்ஸ் ஆலையில், அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை பணியமர்த்தியதோடு, அளவுக்கு அதிகமான பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.

பட்டாசு ஆலை வளாகத்தில் இருப்பு வைத்துள்ள வேதிப்பொருள்களை, சூடான மேற்பரப்புகள், தீப்பொறிகள் மற்றும் எளிதில் தீப்பற்றும் அம்சங்களிலிருந்து தூரமாக வைத்திருக்க வேண்டும். வெப்பச் சிதைவைத் தடுக்க, அம்மோனியம் நைட்ரேட்டின் சராசரி வெப்பநிலை 54.44 டிகிரி செல்சியஸை தாண்டக் கூடாது.

செங்கமலப்பட்டி பட்டாசு விபத்து
“3 பிள்ளையையும் தெருவுல விட்டுட்டு” சிவகாசி பட்டாசுஆலை விபத்தில் ஒரே குடும்பத்தில் பறிபோன 4உயிர்கள்!

மூலப்பொருள் கிடங்கில் போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும். கிடங்கின் சுற்றுப்புறத்தை 15 மீட்டர் அளவுக்கு, சுத்தமாக வைத்திருக்காவிட்டால், அம்மோனியம் நைட்ரேட் உருகும். அப்போது வெப்பச்சிதைவு ஏற்பட்டு, வெடித்துவிடும். ஏற்கனவே இருக்கும் அம்மோனியம் நைட்ரேட்டை முதலில் பயன்படுத்தி காலி செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com