IPL | தோனி போய்விட்டால் பூஜ்ஜியம் தான்.. குளறுபடியால் சிதையும் CSK! FINAL தோல்விக்கு பழிதீர்த்த GT!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி
GT - CSK
GT - CSKfacebook

சிஎஸ்கே அணியில் நடந்துவரும் குளறுபடிகள்!

எதற்காக இத்தனை மாற்றங்கள், என்ன பா நடக்குது இங்க, எதுக்கு அவர ஆட வைக்குறிங்க? என்ற பல கேள்வியோடு தான், சிஎஸ்கே அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சென்று கொண்டிருக்கிறது. கான்வே ஒரு வீரர் இல்லாதது ஒட்டுமொத்த அணியையும் சிதைத்துவிடுமா என்று கேட்டால், சென்னை அணிக்கு அப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது.

சிஎஸ்கே,
சிஎஸ்கே,IPL Page

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுக்கும் தொடக்க வீரர்களுக்கான காம்பினேசன் சரியாக பொருந்திவிட்டது, ஆனால் சென்னை அணி அந்த ஒரு இடத்தை நிரப்ப முடியாமல் ஒட்டுமொத்த ஆடும் அணியிலும் குளறுபடி செய்துவருகிறது. கிட்டத்தட்ட தொடரின் முடிவுக்கே வந்துவிட்டோம், ஆனால் “இதுதான் ஆடும் 11 வீரர்கள்” என்ற முடிவுக்கு இன்னும் சிஎஸ்கே அணி வராமல் சொதப்பிவருகிறது.

ஒரு புது கேப்டன் இருக்கும் இடத்தில், உங்களுடைய சரியான 11 வீரர்கள் இருந்தால் மட்டுமே அந்த கேப்டன் தவறான முடிவுகள் எடுத்தாலும் மீண்டுவர முடியும். ஆனால் அணியிலேயே பிரச்னையை வைத்துக்கொண்டு கேப்டனை குற்றம் சொல்வதில் எந்த பயனும் இல்லை.

அணியில் 4 ஸ்பின்னர்கள் இருந்தும் 4 ஓவர்கள் தான் கொடுக்கிறார்கள், நம்பர் 3 இடத்தில் சிறப்பாக செயல்படும் வீரர் முதல் வீரராகவும், முதலில் இறங்கி அபாரமாக விளையாடும் வீரர் மூன்றாவது வீரராகவும் களமிறங்குகிறார்கள், போதாக்குறைக்கு ஃபீல்டிங்கிலும் சொதப்புகிறார்கள் என்றால் எப்படி ஒரு அணியால் வெற்றிபெற முடியும்.

கால் நூற்றாண்டுக்கு பிறகு டாஸ் வென்ற ருதுராஜ்!

கட்டாயம் வெல்ல வேண்டிய ஒரு போட்டியில் குஜராத் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே எதிர்த்து விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கிட்டத்தட்ட கால்-நூற்றாண்டுக்கு பிறகு டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ருதுராஜ்
ருதுராஜ்

ஆனால் எதற்கு டாஸ் வென்றோம் என ருதுராஜே புலம்பும் அளவுக்கு ஒரு நம்பமுடியாத பேட்டிங்கை வெளிப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ’ஸ்பின்னரையே நம்ப மாட்றாரு பா இந்த ருதுராஜ்’ என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக அணியில் 4 ஸ்பின்னரை எடுத்துச்சென்ற ருதுராஜ், சாண்ட்னருக்கு முதல் ஓவர் கொடுத்து எல்லாவற்றையும் சிறப்பாகவே செய்தார். ஆனால் முதல் ஓவரிலேயே 14 ரன்களை விரட்டிய சுப்மன் கில், ருதுராஜின் நம்பிக்கையை உடைத்தெறிந்தார். அதற்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் ஸ்பின்னர் பக்கமே செல்லவில்லை.

அடுத்தடுத்து சதமடித்த கில்-சுதர்சன்!

யார் பந்துவீசினாலும் ஓவருக்கு ஒரு சிக்சர் என பறக்கவிட்ட சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி, விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 6 ஓவருக்கு 58 ரன்களை எடுத்துவந்து மிரட்டிவிட்டது. நல்ல அடித்தளம் போட்டபிறகு கியரை மாற்றிய இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு சிக்சர் பவுண்டரிகளாக விரட்ட, சிஎஸ்கே அணி முதல் விக்கெட்டை எடுத்துவர முடியாமல் தடுமாறியது. உடன் மோசமான கிரவுண்ட் ஃபீல்டிங் மற்றும் கைக்கு வந்த கேட்ச்சையெல்லாம் கோட்டைவிட்ட சிஎஸ்கே அணி மோசமான ஒருநாளை கொண்டிருந்தது.

பவுண்டரியோ சிக்சரோ அடித்துவிட்டால் சிங்கிளுக்கு சென்று விக்கெட்டையே விடாமல் தரமாக ஆடிய GT ஓப்பனர்கள், 130 ஸ்டிரைக்ரேட்டில்-தான் விளையாடுகிறார்கள் என்ற மோசமான ரெக்கார்டை உடைத்தெறிந்தனர். சிஎஸ்கே அணியின் பிரைம் பவுலர் பதிரானா இல்லாதது அந்தஅணியை விக்கெட்டை எடுத்துவரும் ஐடியாவே இல்லாத வெறுமையான நிலைக்கு தள்ளியது. தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத சுப்மன் கில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து சதமடித்து அசத்தினார். “நீ மட்டும் தான் அடிப்பியா” என கில்லுக்கு சரிசமமாக ஆடிய சாய் சுதர்சன், 7 சிக்சர்களை பறக்கவிட்டு தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை எடுத்துவந்து மிரட்டிவிட்டார். இரண்டு தொடக்க வீரர்களும் சதமடித்து அசத்த, 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் என்ற இமாலய டோட்டலை எட்டியது குஜராத் அணி.

10 ரன்னுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்த CSK!

232 ரன்கள் என்ற மிகப்பெரிய சேஸிங்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எப்படியும் பவர்பிளேவில் அதிகமான ரன்களை எடுத்துவர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரஹானேவை தொடக்க வீரராகவும், ருதுராஜை 3வது வீரராகவும் களமிறக்கிய சிஎஸ்கே அணி “என்ன பா கோமாளித்தனம் பன்றிங்க” என சிஎஸ்கே ரசிகர்களே புலம்பும் ஒரு மோசமான ஐடியாவுடன் களத்திற்கு வந்தது. இந்த சுமாரான அணுகுமுறையின் காரணமாக ரஹானே 1 ரன்னில் வெளியேறியது மட்டுமில்லாமல் ரச்சினையும் ரன்அவுட்டாக்கி வெளியேற்றினார். உடன் களத்திற்கு வந்த கேப்டன் ருதுராஜும் 0 ரன்னில் வெளியேற “சோலி முடிஞ்சது” என்ற மோசமான நிலைமைக்கே சென்றது சிஎஸ்கே அணி.

GT - CSK
‘சதமடித்த சாய் சுதர்சன்..’ - சச்சின் சாதனையை முறியடித்து முதல் இந்திய வீரராக வரலாறு! மிரண்டுபோன CSK!

10 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்த சென்னை அணி தடுமாற, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி இருவரும் அணியை மீட்டுவர போராடினர். அதுவரை சிறப்பாக வீசிய குஜராத் பவுலர்களுக்கு எதிராக எதிரடி அடித்த இந்த ஜோடி, சிக்சர் பவுண்டரி என நாலாபுறமும் சிதறடித்து பதிலடி கொடுத்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி அரைசதமடிக்க, மறுமுனையில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு கெத்துக்காட்டிய மொயின் அலியும் அரைசதமடித்து ரன்களை எடுத்துவந்தார். மிட்செல் மற்றும் மொயின் அலியின் அதிரடியால் திடீரென ஆட்டம் தலைகீழாக திரும்ப, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை பிரிக்கும் விக்கெட்டை தேடியது டைட்டன்ஸ் அணி.

3 விக்கெட் வீழ்த்திய மோஹித் சர்மா!

ஆனால் சரியான நேரத்தில் மிட்செல் மற்றும் மொயின் அலி இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றிய மோஹித் சர்மா கலக்கிப்போட்டார். இரண்டு செட்டில் ஆன பேட்டர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேற சிஎஸ்கே அணி ஆட்டம் கண்டது. அதற்குபிறகு களமிறங்கிய ஜடேஜா மற்றும் துபே இருவரும் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டாலும், மீண்டும் பந்துவீச வந்த மோஹித் சர்மா அதிரடி வீரர் துபேவை வெளியேற்றி சிஎஸ்கேவின் நம்பிக்கையை உடைத்தார். அடுத்த 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த சிஎஸ்கே அணி மோசமான நிலைமைக்கு சென்றது, கடைசியாக களத்திற்கு வந்த எம்எஸ் தோனி 3 சிக்சர்கள் அடித்தாலும் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது சென்னை அணி.

GT - CSK
'ஏன் எந்தவிதமான எமோசனையும் வெளிப்படுத்த மாட்றீங்க?' - சுவாரசியமான பதில் கொடுத்த சுனில் நரைன்!

இந்த தோல்வியின் மூலம் மீதமிருக்கும் 2 போட்டிகளையும் வென்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலைமைக்கு சென்றுள்ளது சென்னை அணி. சிஎஸ்கே அணியிடம் இன்னும் மேட்ச் வின்னிங் வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் எந்த இடத்தில் எந்த வீரர்கள் ஆடவேண்டும் என்பதை கண்டுபிடிக்காமல் சொதப்பிவருகிறது.

ஒரு இடத்துக்கு போட்டியிடும் 5 அணிகள்!

தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை பதிவுசெய்த தமிழக வீரர் சாய் சுதர்சன், 25 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 1000 ரன்களை பதிவுசெய்து சாதனை படைத்தார். இதற்கு முன் 31 இன்னிங்ஸ்களில் 1000 ஐபிஎல் ரன்களை அடித்திருந்த சச்சின் சாதனையை உடைத்த சாய் சுதர்சன், அதிவேகமாக ஆயிரம் ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை தன் பெயரில் எழுதியுள்ளார்.

சென்னை அணி தோல்விபெற்றதால் “டெல்லி கேபிடல்ஸ், LSG, குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே” முதலிய 5 அணிகள் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும் போட்டியில் உயிர்ப்புடன் இருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com