#IREvPAK | அடி மேல் அடி.. பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி! பாபர் அசாம் பரிதாபம்!

டி20 உலகக்கோப்பையை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அயர்லாந்து அணி - பாகிஸ்தான் அணி
அயர்லாந்து அணி - பாகிஸ்தான் அணிமுகநூல்

பாகிஸ்தான் அணிக்கு தற்போது அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. அந்த அணிக்கு எதுவுமே சரியாக அமையாமல் தவித்து வருகிறது. சமீபத்தில்தான் முன்னணி வீரர்கள் யாருமே இல்லாத நியூசிலாந்தின் இளம் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியின் வடு ஆறுவதற்குள் கத்துக்குட்டி அணியான அயர்லாந்திடம் தோல்வியை சந்தித்து மோசமான வரலாறு படைத்துள்ளது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, அயர்லாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. அதன்படி அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் முதலில் பந்து வீச முடிவு செய்ததால் முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான்.

ஆனால் அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முஹமது ரிஸ்வான் 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் தொடக்க வீரர் சயம் அயுப் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் பாபர் அசாம்.

கேப்டன் பாபர் அசாம் 43 பந்துகளில் 57 ரன்களும், அயுப் 29 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அஸம் கான், ஷதாப் அஹ்மது ஆகியோட் டக் அவுட் ஆகினர். இஃப்திகார் அஹ்மது 15 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 37 விளாசியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கிரேக் யங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 8, விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கெர் 4 ரன்னில் சொதப்பினாலும் தொடக்க ஆட்டக்காரர் ஆண்டி பால்பிர்னி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

பாகிஸ்தான் பந்து வீச்சை திறம்பட சமாளித்த அவர் 77 ரன்கள் குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹேரி டெக்டார் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறுதி கட்டத்தில் டாக்ரெல் அதிரடியாக விளையாடி 24 எடுத்து ஆட்டமிழந்தார்.

அயர்லாந்து வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கரெத் டிலானி, கர்டிஸ் சாம்பர் இருந்தனர். ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரை அப்பாஸ் அப்ரிடி வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட கர்டிஸ் கேம்பர் முதல் பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள், நான்காவது பந்தில் பவுண்டரி, 5வது பந்தில் லெக் பைசில் ஒரு ரன் என 5 பந்துகளிலேயே 11 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

முடிவில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி பெற்றது. அயர்லாந்து வீரர் பால்பிர்னி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அயர்லாந்து அணி - பாகிஸ்தான் அணி
'ஏன் எந்தவிதமான எமோசனையும் வெளிப்படுத்த மாட்றீங்க?' - சுவாரசியமான பதில் கொடுத்த சுனில் நரைன்!

டி20 உலகக்கோப்பையை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com