Published : 23,May 2017 02:04 AM

ஸ்ரீசாந்த்துக்கு வாழ்நாள் தடை: ஐகோர்ட் நோட்டீஸ்

Ban-on-Sreesanth-HC-issues-notice

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் விளக்கம் கேட்டு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐபிஎல் ஆறாவது சீசனின் போது சூதாட்டப் புகார் தொடர்பாக ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் உள்ளிட்ட மூன்று வீரர்களுக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா நீதிமன்றம் கிரிக்கெட் வீரர்கள் மூவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை காவல்துறை சமர்பிக்கவில்லை என தெரிவித்தது. மூவரையும் விடுவித்தும் தீர்ப்பு அளித்தது.

எனினும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை இதுவரை நீக்கப்படவில்லை. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக்குழுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்