மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையில் நடிகர் அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆராக நடிக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது. இந்த படத்திற்கு தலைவி என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவ்த் நடிக்கிறார். ஏ.எல் விஜய் இயக்குகிறார். இவர், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பாகுபலி, ஆர்.ஆ.ஆர் படங்களில் கதாசிரியரும் இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் இதன் கதையை எழுதுகிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. அவர் எம்.ஜி.ஆராக நடிப்பது, இப்போது உறுதியாகியுள்ளது.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்