Published : 30,Sep 2019 02:43 PM

“தர்சன் எங்கே ‘மிஸ்’ ஆனார்?” - சேரனின் பிக்பாஸ் பேட்டி

Cheran-said-about-Big-Boss-House-and-Darshan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இயக்குநர் சேரன் செய்தியாளர்களிடம் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் சேரன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்.. அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன் பங்கேற்றார். அப்போது தர்சன் குறித்த ட்விட் பதிவை குறிப்பிட்டு செய்தியாளர்கள் சேரனிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சேரன், “தர்சன் வெற்றி பெற அனைத்து தகுதிகளும் உடையவர். எங்கே தவறினார் எனத் தெரியவில்லை. மக்களின் வாக்குகள் தான் வெற்றியாளர்களை தீர்மானிக்கிறது. அந்த வகையில் அவர் எங்கேயோ தவறியுள்ளார். எனக்கு பிக்பாஸ் அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. புதுமையான இடங்களில் இருப்பது, பயணிப்பது போன்றவை கலைஞர்களாக இருந்தால் கூட சிலருக்குப் பிடிக்கும். இதுவும் அதுபோன்று ஒரு உணர்வு. 

 

அதன்படி 100 நாட்கள் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தது ஒரு புதுமையான அனுபவம். பிக்பாஸ் அனுபவம் என்பது இன்றைக்கு நாம் மாட்டிக்கொண்டிருக்கும் நெருக்கடியான நிலையில், செல்போன் இன்றி, பணம் இன்றி நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நான் வாழ்ந்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிக்பாஸ் என்பது ஒரு விளையாட்டு. விளையாட்டு என்றால் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அங்கு எனக்கு என்ன மரியாதை கிடைத்தது என்பதை அவர்களே திரையில் காட்டிவிட்டார்கள்” என அவர் கூறினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்