நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படம் வரலாற்றுப் பின்னணியோ, திப்புசுல்தான் வரலாற்றையோ கொண்ட படமல்ல என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுவதால் திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என ஒரு அமைப்பினர் கடந்த 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது வரலாற்றுப் பின்னணியோ, திப்புசுல்தான் வரலாற்றையோ கொண்ட படமல்ல. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாது என்பதை உறுதி செய்ய தனிக்கைகுழு உள்ளது. இதைதவிர என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கே உள்ளது.
ஆகவே எந்த ஒரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
Loading More post
"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!
27 வருடத்திற்குப் பிறகும் அதே எனர்ஜி.. ‘சக்கு சக்கு’ பாடலை ரீ-கிரியேஷன் செய்த மன்சூர்!
மாணவர்களுக்கு புத்தகங்கள் அச்சடிக்க காகித பற்றாக்குறை - கடும் நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்
மூளைப் பகுதியில் இருந்த கட்டி வெளிப்புற காயமின்றி அகற்றம் -திருச்சி அரசு மருத்துவமனை சாதனை
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி