Published : 26,Sep 2019 06:31 AM
ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 360 ரூபாய் விலை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 45 ரூபாய் விலை குறைந்து 3 ஆயிரத்து 597 ரூபாய்க்கும், ஒரு சவரன் 360 ரூபாய் விலை இறங்கி 28 ஆயிரத்து 776 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் 70 காசுகள் விலை குறைந்து 50 ரூபாய் 30 காசுகளுக்கு விற்கப்படுகிறது. சென்ற 4ஆம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 3 வாரங்களில் அதன் விலை ஆயிரத்து 344 ரூபாய் குறைந்துள்ளது.