[X] Close

‘இது உங்கள் சொத்து’ - முன்னாள் நீதிபதி சொன்ன காமெடி கதை

What-belongs-to-Railway-is--not--your-property

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எச்.என். நாகமோகன் தாஸ், உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் மக்களிடையே பழகி விழிப்புணர்வுகளை வழக்கறிஞர்கள் ஏற்படுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும் அவர் பணியாற்றிய நாளில் சந்தித்த ஒரு சுவாரஸ்யமான வழக்கு ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். 

அதில் ''ஒருநாள் ஒரு இளைஞர் பெங்களூருவில் இருந்து வந்த ரயிலில் வந்தார். அவர் மைசூரில் இறங்கினார். அவர் ரயில் நிலையத்தில் இருந்த இரும்புக் கம்பிகளை தன்னுடையே எடுத்துச்சென்றார். இதனைக்கண்ட ரயில்வே காவல்துறை அந்த இளைஞரை கைது செய்தது. 


Advertisement

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் கண்ணியமாக அந்த இளைஞர் நடந்துகொண்டார். அந்த இளைஞரின் படிப்புத்தகுதி குறித்து நீதிபதி விசாரித்தார். அதற்கு, தான் பட்டப்படிப்பு படித்துள்ளதாக அந்த இளைஞர் கூறினார். 

படித்த இளைஞர் ஏன் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அந்த இளைஞர் ''ரயில் நிலையத்தில் மாட்டப்பட்டிருந்த பலகையொன்றில் 'ரயில் நிலையத்தின் சொத்துகள்; உங்கள் சொத்துகள்’ என எழுதப்பட்டிருந்தது. அதனால் தான் நான் இரும்புக்கம்பிகளை எடுத்துச் சென்றேன்'' எனத் தெரிவித்தார். 

இதனைக் கேட்டதும் நீதிமன்றமே சிரிப்பால் அதிர்ந்தது எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய நாகமோகன் தாஸ், ''இப்படிப்பட்ட மாணவர்களையும் நாம் உருவாக்குகிறோம். எனவே நாம் பல இடங்களுக்கும் பயணம் செய்து மக்களோடு பழகி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'' என தெரிவித்தார். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close