மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் வடமேற்கு பகுதியில் கிராரி அருகே உள்ளது யாதவ் என்கிளேவ் காலனி. இங்கு வசித்து வந்தவர் அஷூ (31). இவர் மனைவி சீமா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. அஷூ, கம்யூட்டர்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு சொந்த வீடு இருக்கிறது. அது பழங்கால வீடு என்பதால், சமீபத்தில் பிரேம் நகர் பகுதியில் வேறு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
சீமா, வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக அஷூ சந்தேகம் அடைந்தார். இதன் காரணமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சந்தேகம் வலுத்ததை அடுத்து, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் பழைய வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துவர வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் அஷூ. அங்கு இருவருக்கும் மீண்டும் வாய்த் தகராறு ஆரம்பித்திருக்கிறது.
ஆத்திரமடைந்த அஷூ, சீமாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, அந்த வீட்டின் செப்டிக் டேங்கில் தலை மற்றும் கை கால்களை போட்டுள்ளார். ஒரு கேரி பேக்கில் உடலை வைத்து, பைக்கில் 2 கி.மீ எடுத்துச் சென்று அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அதை போட்டார்.
பிறகு சீமாவின் அம்மாவுக்கு போன் செய்து, ‘உங்க மகளை கொன்னுட்டேன்’ என்று சொல்லிவிட்டு பிரேம் நகர் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்தார். பின்னர் போலீசார், அஷூ சொன்ன இடத்தில் 8 மணி நேரம் தேடி, சீமாவின் உடலையையும் தலையையும் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!