மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இ-சிகரெட்டிற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சூழலில் இ-சிகரெட் என்றால் என்ன?
இ-சிகரெட் என்பது Electronic Nicotine delivery Systems (ENDS) வகையாகும். இந்தச் சிகரெட் புகையிலையை பயன்படுத்தாது. இதற்கு மாறாக ஒரு ஆவியாகும் தன்மை கொண்ட கரைசல் வேதிப் பொருளை பயன்படுத்துகிறது. இதில் நிக்கோடின், புரோப்லீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருக்கும். இந்த இ-சிகரெட் பல வடிவங்களில் இருக்கும். அனைத்தும் பேனாவை போன்று வடிவத்தில் சந்தைகளில் கிடைக்கின்றன.
இந்த பேனா போல் உள்ள இ-சிகரெட்டில் பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இந்த இ-சிகரெட்டை வாயில் வைத்து ஒருவர் உள்ளே இழுக்கும்போது இதன் செயல்பாடு தொடங்கும். இ-சிகரெட்டிலுள்ள கரைசல் ஆவியாக மாறி புகை வெளிவரும். அப்போது அந்த நபர் நிக்கோடினை உள்ளே முகர்வார். இ-சிகரெட் அதிக வலுவாக இருக்கும் பட்சத்தில் நிக்கோட்டின் வேகமாக உடம்பிற்குள் செல்லும். அது உடலுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும்.
இ-சிகரெட்டில் பல்வேறு சுவைகளில் வருகிறது. அதாவது சுவைக்கு ஏற்ப கரைசலில் வாசனை திரவியம் சேர்க்கப்படும். இ-சிகரெட்டை ஏற்கெனவே அமெரிக்காவின் மிசிகன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்துள்ளன. இந்தியாவில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பதால் இதனை தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி