Published : 31,Aug 2019 01:44 AM

அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

Rain-likely-in-tamilnadu-in-2-3-days

செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அதிகரித்திருந்த நிலையில் மாலையில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒருசில இடங்களில் வெப்பநிலை 25 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் நேற்று மாலை நேரத்தில் கிண்டி, அடையாறு, திருவல்லிக்கேணி, திருவான்மியூர், மீனம்பாக்கம், மாதவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பொழிந்தது. இதேபோல் கோயம்பேடு, அசோக்நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. ப‌ல இடங்களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக தரமணியில் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்