[X] Close

‘ஒரு நீண்ட பிகில் அடிக்கிறேன்’ - வைரலாகும் விஜய் அம்மா கடிதம்

Actor-vijay-s-mother-letter-goes-viral

நடிகர் விஜய்க்கு அவரது தாயார் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்தக் கடிதத்தில் ''ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள்.  ஆனால் நான் பெற்ற பிள்ளை இன்று கோடான கோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடி கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப்பற்றி.


Advertisement

நீ என் கரம் பற்றி நடந்ததை பின் நடந்ததை எல்லாம் அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களில் உச்சுக்குளிர்ந்து என் அகம் எங்கும் வழிகிறதே. அந்த நுண்ணிய உணர்வுகளை எந்தக் காகிதத்தில் வடிப்பது. அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம்  புரியாமல் ஆர்ப்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில் என் ஆழ்மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிக்கையில் அதை எந்தப் பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.

நீ உன் அழகை நிறுத்தி முதன் முதல் உன் பூவிதழ் விரித்து புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே இன்பத் தத்தளப்பில் நீ புரியும் புன்னைகையை விவரிக்க... தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதிவிட முடியும்?

சுருங்கக்கூறின், எம்.கே. தியாகராஜபாகவதர், எம்.ஜி.ராமச்சந்திரன், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்....'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

நன்றி: விகடன்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close