Published : 27,Aug 2019 01:39 PM
மாணவி தாக்கப்பட்ட விவகாரம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக ஆசிரியர் தாக்கியது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த புளியரணங்கோட்டை அரசு ஆரம்பப்பள்ளியின் சாவியை தொலைவிட்டதாக கூறி அப்பள்ளியில் பயின்று வரும் 5ம் வகுப்பு மாணவி லத்திகாவை ஆசிரியர் தேவி கடுமையாக அடித்ததோடு, கால்களால் எட்டி உதைதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த மாணவி மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நீதிபதி ஜெயச்சந்திரன் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.