[X] Close

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Indian-President-Ramnath-Kovind-approved-Kasgmir-Bill

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் எனும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதுதொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.   


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close