[X] Close

நீலகிரியில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு

5-killed-in-neelagiri-rain-issue

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக இன்று மட்டும் மூன்று இடங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் வீடு இடிந்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.


Advertisement

இதையடுத்து இன்று நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் வீடு இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து காட்டுக் குப்பை  பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் குருத்துக் குளி பகுதியைச் சேர்ந்த விமலா 38, சுசீலா 36 ஆகிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இந்த இரண்டு நாட்களில் 5 உயிர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகளும் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close