Published : 03,Aug 2019 06:31 AM

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழரை மீட்கக்கோரி முதலமைச்சர் கடிதம்

CM-Palanisamy-letter-to-foreign-minister

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள தமிழரை  மீட்கக்கோரி முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் சென்னையை சேர்ந்த 27 வயதான ஆதித்யா வாசுதேவனை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

கடந்த 19-ஆம் தேதி இம்பெரோ கப்பலில் பணியாற்றி வந்த ஆதித்யா வாசுதேவன் உள்பட 18 இந்தியர்கள் ஈரானில் சிறைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்