தான் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் ரோகித் சர்மாவை மீண்டும் விட்டுவிட்டதால், ரசிகர்கள் விராத் கோலியிடம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.
உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேறியதை அடுத்து, அணிக்குள் பிரச்னை என்று கூறப்பட்டது. துணை கேப்டன் ரோகித் சர்மாவின் கருத்துக்களை கேப்டன் விராத் கோலி கேட்கவில்லை என்றும் இருவருக்கு பின்னும் வீரர்கள் தனித்தனி குரூப்பாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து குறுகிய ஓவர் போட்டிகளில் விராத் கோலியை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து அடங்கியது.
ஆனால், தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் இதை யாரோ கிளப்பி விடுகிறார்கள் என்றும் இதனால்
அவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது எனத் தெரியவில்லை என்றும் விராத் கோலி சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக மியாமி செல்லும் முன், இந்திய வீரர்கள் சிலருடன் விராத் கோலி செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த செல்ஃபியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இதனால், ’உங்களுக்குள் பிரச்னை இல்லை என்றால் ரோகித்தை ஏன் புகைப்படத்தில் விட்டுவிட்டீர்கள்?’ என்று கேள்வி கேட்கத் தொடங்கினர் ரசிகர்கள். ரோகித் எங்கே என்றும், அவரை விட்டுவிட்டதால், பிரச்னை இருப்பது உண்மைதான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றும் விராத் கோலி, புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதிலும் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ’ஸ்குவாட்’ என்று அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் ரோகித் இல்லாததால், ரசிகர்கள் ரோகித் எங்கே? என்று மீண்டும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரம் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ரோகித் சர்மா, தவான், ரிஷாப், புவனேஷ்வர் குமார் ஆகியோர் உள்ளனர். இதில் விராத் இல்லை. இதனால், அணியில் பிளவு இருப்பது உண்மைதானோ என்று சில ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை கேட்டுள்ளனர்.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?