Published : 23,Jul 2019 06:12 AM

‘ஹேப்பி பர்த்டே சாஹல்’ -  வேடிக்கையான தருணங்கள் வெளியிட்டு வாழ்த்துகள் சொன்ன பிசிசிஐ

Yuzvendra-Chahal-Birthday-Special--Relive-Some-of-the-Funny-Moments-From-Chahal-TV-As-the-Indian-Cricketer-Turns-29--Watch-Video

இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் தனது 29 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வீடியோ வெளியிட்டு பிசிசிஐ வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. 

ஹரியானா, ஜிண்ட் பகுதியில் 1990 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி சாஹல் பிறந்தார். இந்திய கிரிக்கெட் வீரர்களில் உள்ள ஸ்பின்னர்களில் சாஹலும் அறியப்படக்கூடிய ஒருவர். சாஹல் இதுவரை 49 ஒருநாள் போட்டியில் விளையாடி 84 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 டி 20 போட்டிகளில், அவர் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் விளையாடிய 2019 உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது விக்கெட் எடுக்கும் திறன்களை காட்டிலும் மற்ற நேரங்களில் சாஹல் நகைச்சுவையுணர்வுடனே காணப்படுவார். 

இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் தனது 29 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் சாஹலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. மேலும் அதில் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளது.

அந்த வீடியோவில் சாஹல், உடை மாற்றும் அறையிலும் வீடு மற்றும் சுற்றுலாவுக்கு செல்லும் போதும், அவர் செய்த சில வேடிக்கையான தருணங்கள் இடம் பெற்றுள்ளன. போட்டிகள் முடிந்ததும் சாஹல் தனது சக விளையாட்டு வீரர்களிடம் பேட்டி எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பார். அதுகுறித்த வீடியோவைதான் தற்போது பிசிசிஐ தொகுத்து வெளியிட்டுள்ளது. 

https://twitter.com/i/status/1153511302138138624

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்