உலகக் கோப்பைக்கான அணி தேர்வில் தேர்வுக் குழுவினர் சரியாக செயல்படவில்லை என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்தத் தொடருக்கான இந்திய அணி தேர்வில் சரியான நடைமுறை கடைபிடிக்கவில்லை என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், “இந்திய அணி வெற்றி பெறும் போது மட்டும் தேர்வுக்குழுவினர் பாராட்டு பெறுகின்றனர். ஆனால் தோல்வியடையும் போது, வீரர்களை மட்டும் குறை கூறுவது தவறு. இந்தத் தொடருக்கு வீரர்களை தேர்வு செய்த தேர்வுக் குழுவினரும் அணியின் தோல்விக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். அந்தவகையில் இந்த உலகக் கோப்பைக்கான அணியின் தேர்வு சரியாக இல்லை.
ஏனென்றால் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் நான்காவது இடத்தில் வீரர்களை மாறி மாறி களமிறக்கினர். இதற்கு சரியான அணி தேர்வு இல்லாததே காரணம். உதாரணமாக இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் அடைந்த போது தொடக்க ஆட்டகாரரை மாற்று வீரராக எடுக்காமல் நடுகள ஆட்டக்காரரான ரிஷப் பந்தை அணியில் எடுத்தனர்.
அதேபோல நடுகள ஆட்டக்காரரான விஜய் சங்கர் காயம் அடைந்த போது அவருக்கு மாற்று வீரராக ஒரு தொடக்க ஆட்டக்காரரான மாயங்க் அகர்வாலை தேர்வு செய்தனர். எனவே இவ்வாறு அணியின் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவின் செயலை யார் ஆய்வு செய்வார்கள் என்ற எண்ணம் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?