பப்ஜி விளையாடக்கூடாது என தாய் திட்டியதால் 17 வயது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது
அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம் வந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும். சமீபத்தில் அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது பப்ஜி என்ற மொபைல் விளையாட்டு. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்த விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், விளையாடுபவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஈரான், நேபாளம் போன்ற நாடுகள் பப்ஜி விளையாட்டை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்
இந்நிலையில் பப்ஜி விளையாடக்கூடாது என தாய் திட்டியதால் 17 வயது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து ஹரியானாவில் நடந்துள்ளது. ஹரியானாவின் ஜிண்ட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்ந்து தனது செல்போனில் பப்ஜி விளையாடியுள்ளான். படிப்பில் கவனம் செலுத்தாமல் பப்ஜி விளையாடுவதாக சிறுவனின் தாயார் அவனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
உயிரிழந்த சிறுவனின் தந்தை காவல்துறை அதிகாரி ஆவார். இது குறித்து பேசிய அவர், நான் பணிக்குச்சென்றிருந்த நேரம் பப்ஜி விளையாட வேண்டாம் என மனைவி திட்டியுள்ளார். அவனது செல்போனையும் பிடுங்கிவைத்துள்ளார். அடுத்த நாள் காலை பார்த்த போது மகன் தற்கொலை செய்திருந்தான் என தெரிவித்துள்ளார்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!