சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் ஓடவில்லை.
சென்னை மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென எந்தவித முன் அறிவிப்புமின்றி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக ஊதியம் மாத இறுதிநாளில் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஆனால் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை. இதனால் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
திடீர் ஸ்டிரைக் காரணமாக பேருந்து பயணத்திற்காக காத்திருக்கும் மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவிகள் மற்றும் இதர பலர் பேருந்து இயக்கப்படாததால் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவிற்கு செல்கின்றனர்.
அம்பத்தூர், அண்ணாநகர், பூவிருந்தவல்லி பணிமனைகளிருந்து பேருந்துகளை எடுக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளிலும் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது.
Loading More post
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்