கோவை அருகே துப்புரவு பணியாளர்கள் மூன்று பேர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் துப்புரவு பணியாளர்கள் செப்டிக் டேங் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கி துப்புரவு பணியாளர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர். ஒருவர் விஷவாயு தாக்கியதையடுத்து மீதமுள்ள 2 பேரும் அவரைக் காப்பாற்ற முற்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் பணிபுரியும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனப் பலமுறை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினாலும், ஆங்காங்கே போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி துப்புரவு பணியாளர்கள் விஷவாயு தாக்கி பலியாவது வாடிக்கையாகி வருகிறது.
அதேபோல பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் போதுமான விழிப்புணர்வு தொழிலாளர்கள் மத்தியில் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் மனித உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி