[X] Close

“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி

Mayawati-criticized-samajwadi-party

கடந்த மாதம் வரை கூட்டணியில் இருந்த அகிலேஷ் யாதவையும், அவரது தந்தை முலாயம் சிங்கையும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.


Advertisement

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இந்த இரு எதிரெதிர் கட்சிகளும் கூட்டணி அமைத்த நிலையில், தேர்தலில் இக்கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. பாஜகவே அதிக இடங்களில் வெற்றி கண்டது. இதனையடுத்து இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான விரிசல் போக்கு அதிகரித்தது. தேர்தல் தோல்வி காரணமாக சமாஜ்வாதி கட்சி உடனான கூட்டணியை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மாயாவதி முறித்துக் கொண்டார்.


Advertisement

இந்நிலையில், அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றும், முலாயம் சிங் யாதவ் பாரதிய ஜனதாவின் ரகசியக் கூட்டாளி என்றும் மாயாவதி சாடியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் முஸ்லிம்களுக்கு சீட் தர வேண்டாம் என அகிலேஷ் தன்னிடம் கூறியதாகவும், அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அகிலேஷின் ஆட்சியின்போது யாதவர் அல்லாத மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி நடந்ததாகக் குற்றம்சாட்டிய மாயாவதி, அதனால்தான் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அந்தச் சமூகத்தினர் வாக்களிக்கவில்லை என்றும் தெரிவித்தார். வழக்குகளில் இருந்து தப்ப, பாரதிய ஜனதாவுடன் முலாயம் சிங் ரகசியக் கூட்டு வைத்திருப்பதாகவும் மாயாவதி விமர்சித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close