[X] Close

’ரொம்ப திட்டாதீங்க...’ பாகிஸ்தான் கேப்டன் வேண்டுகோள்!

People-can-t-even-imagine-what-we-re-going-through--Sarfaraz-Ahmed

விமர்சனம் என்ற பெயரில் அதிகமாக திட்ட வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடன் மோதிய பாகிஸ்தான் அணி படு தோல்வி அடைந்தது. இதையடுத்து கடுமையாக போராடாமல் தோற்றுவிட்டது என்று கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டனர்.


Advertisement

இந்நிலையில், ஷாப்பிங் மால் ஒன்றில் தனது குழந்தையுடன் சர்பிராஸ் அகமது சென்றபோது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அவரை அழைத்துப் பேச்சுக் கொடுத்தார். அப்போது, சர்பிராஸ் விலகிச்செல்ல முயன்றபோது, அவரது உடல் பருமன் குறித்து திட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பின்னர், அந்த ரசிகர் பிறகு தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இமாம் உல் ஹக்கும், பாபர் ஆஸமும் கடந்த வியாழக்கிழமை, ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றபோது, பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் அவர்களுக்கு எதிராக கத்தினர். கடுமையாகத் திட்டினர். இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கூறப்பட்டுள்ளது.


Advertisement

இதுபற்றி பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது நேற்று கூறும்போது, ’’எங்கள் வீரர்களும் வீரர்களின் குடும்பத்தினரும் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சமூக வலைத் தளங்களில் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் எழுதுகிறார்கள். அது எங்களுக்கு பலத்த காயத்தை உண்டாக்குகிறது. இதனால் வீரர்கள் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் இனி நடக்கக் கூடாது. மீடியாவும் சமூகவலைத்தளங்களும் எங்கள் கையில் இல்லை. அதில் எழுதுபவர்களை தடுக்க முடியாது. 

பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இதே ரசிகர்கள் வெற்றி பெற்றால் எங்களை கொண்டாடுவார்கள் என்பதும் தெரியும். அதனால் எங்கள் ஆட்டத்தை பற்றி விமர்சியுங்கள். தனிப்பட்ட முறையில் விமர்சிக்காதீர்கள். சில முன்னாள் வீரர்கள், டிவி முன்  அமர்ந்துகொண்டு, தங்களை கடவுள் போல நினைத்து விமர்சனம் செய்கிறார்கள். எங்களை கிரிக்கெட் வீரர்களாக கூட அவர்கள் மதிப்பதில்லை. நான் அவர்களுக்கு என்ன சொல்ல முடியும்? ஏதாவது பதில் சொன்னால், இன்னும் அதிகமாகத் திட்டுவார்கள்’’ என்றார். 


Advertisement

Advertisement
[X] Close