சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாய்கள் செய்த யோகா வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, மக்கள் அன்றாடம் யோகா செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள எல்லை பாதுகாப்புப் படையின் நாய்கள் பிரிவை சேர்ந்த நாய்களும் அதன் பயிற்சியாளர்களும் யோகா செய்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நாய்கள் தங்களின் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து யோகா ஆசனங்களை செய்கிறது போல் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதேபோல இந்திய ராணுவப்படையிலுள்ள நாய்கள் பிரிவிலுள்ள நாய்களும் ராணுவ வீரர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தன. இந்தப் புகைப்படங்களை இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ராணுவ வீரர்கள் ஒருபுறமும் நாய்கள் அவர்களுக்கு எதிர்புறமும் இருந்து யோகா செய்வது போல் உள்ளது.
இந்தப் புகைப்படங்களும் வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்