[X] Close

நண்பராக பழகியவர் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை

Collaborative-Sexual-Abuse-of-a-Young-Woman-in-villupuram

விழுப்புரம் அருகே வேலைக்குச்சென்று திரும்பிய இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஒருவர், நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரது நண்பர் அருள்ஜோதி என்பவர், வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்றார். வழியில் உள்ள ரயில்நிலையம் அருகே அழைத்துச்சென்ற அவர், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்த்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். 

Image result for இளம்பெண் பாலியல் வன்கொடுமை


Advertisement

இதனையடுத்து ரயில்வே தண்டவாளத்தில் அந்த பெண்ணை இழுத்துச் சென்றதால் உடலிலும் பலத்த காயமடைந்த அந்த பெண், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கண்டமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் நண்பர் என்று கூறி பழகியவர் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close