Published : 17,Jun 2019 07:57 AM

“நான் பொய் சொல்லவில்லை”- விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..!

actress-sri-reddy-sexual-harassment-complaint-on-actor-vishal

திரையுலகில் நடிகர்கள் இயக்குநர்கள்‌ மீது பாலியல் புகார்கள் சுமத்தி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு தருவதற்காக பாலியல் இச்சைக்கு அழைத்ததாகக் கூறி, தெலுங்கு நடிகர் சங்கத்தின் முன் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் இயக்குநர் தேஜா உள்ளிட்டோர் மீது புகார் கூறிய அவர், தமிழில் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த் மற்றும் சுந்தர் சி மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விஷால் பல பெண்களை ஏமாற்றியிருப்பது தனக்கு தெரியும் என்று தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார். உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை என்று நிரூபியுங்கள் என்று விஷாலுக்கு சவால் விடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

தனது தொழில் மீதும், தாயார் மீதும் சத்தியம் செய்துள்ள ஸ்ரீரெட்டி, தான் பொய் சொல்லவில்லை என்‌றும் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நேரத்தில் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்