[X] Close

இந்தியாவிற்கு எதற்கு விண்வெளி நிலையம்?

India-involved-in-build-a-space-research-center-at-Space

விரைவில் விண்வெளியில் ஆராய்ச்சி கூடத்தை அமைக்கவிருக்கிறது இந்தியா என்ற செய்தியை வெளியிட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறது இஸ்ரோ அமைப்பு. விண்வெளியில் ஆராய்ச்சி மையமா? அப்படி என்றால் என்ன? அதனால் என்ன என்ன நன்மை கிடைக்கும்? என பொதுமக்கள் பலருக்கும் பல சந்தேகம் எழலாம். 

Image result for விண்வெளியில் ஆராய்ச்சி மையம்

விண்வெளி நிலையம் எதற்கு என முதலில் தெரிந்து கொள்வோம் !


Advertisement

பூமியில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்வதாக சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதே பூமியில் தான் உயிரினங்களும் மனிதர்களும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மனிதனுக்கு மட்டும் இந்த பூமியை தவிர வேறு எங்காவது வசிக்க முடியுமா என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. பூமிக்கு மேலே வட்டமாய் தெரியும் நிலவின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு மனிதனை விண்வெளி ஆராய்ச்சி செய்ய வைத்தது. இது தற்போதைய அறிவியல் சூழ்நிலையில் மட்டுமல்ல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்திய, ஐரோப்பிய, எகிப்திய, இலக்கியங்களில் நிலவின் மீதான குறிப்பாக விண்வெளியின் மீதான மனிதனின் ஆர்வத்தையும் காதலையும் மிகத்தெளிவாக எடுத்துச் சொல்லியது. 

அறிவியல் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர வளர தனது ஆசையை மேலும் வளர்த்துக் கொண்டான் மனிதன். நிலவிற்கு சென்று வரும் பயணம் வெற்றியடையவே பூமியைப் போல ஏராளமான கோள்கள் சூரியனை சுற்றுவதையும், அகண்ட விண்வெளியில் ஏராளமான கோள்கள் இருப்பதையும் தெரிந்து கொண்டான். இதன் காரணமாக செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் மனிதன் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என ஆராய்ச்சியை தொடங்கினான். இந்த ஆராய்ச்சியின் மிக முக்கிய கட்டம் தான் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்கும் முடிவு. 

Image result for விண்வெளியில் ஆராய்ச்சி மையம்

பூமியைத் தவிர மற்ற கோள்களில் ஈர்ப்பு விசை இல்லாததை தெரிந்து கொண்ட மனிதன் ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் நீண்ட நாட்களுக்கு மனிதர்களால் வாழ முடியுமா என்பதை தெரிந்துகொள்ள முடிவெடுத்தான். இதற்காக விண்வெளியில் ஒரு நிலையத்தை அமைத்து அதன் மூலமாக விண்வெளி சம்பந்தமான ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள திட்டமிட்டான். எனவே ஈர்ப்பு விசை, பூமியைத் தாண்டி மற்றொரு கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள், பூமி சந்தித்து வரும் பருவ நிலை மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மிக விரிவாக தெரிந்து கொள்வதற்காகத்தான் விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. 

எப்போது எப்படி உருவானது விண்வெளி நிலையம்? 

விண்வெளி நிலையம் அமைக்கும் யோசனை 1869 இல் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் மூலமாக தான் உருவானது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? இல்லை என்றாலும் அதுதான் உண்மை. எட்வேர்ட் எவர்ட்டி ஹாலே என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய தி பிரிக் மூன் என்ற புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயம் தான் விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கும் முடிவிற்கு அடிப்படையானது என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.

Image result for விண்வெளி நிலையம்

விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் 1971ம் ஆண்டு சல்யூட் ஒன்று என்ற திட்டத்தின் மூலமாக முதல் விண்வெளி நிலையம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக செயல்படுத்தியது சோவியத் யூனியன். இதில் 23 நாட்கள் 3 வீரர்கள் தங்கி இருந்து சாதனை படைத்தனர். இதற்குப் பிறகு சல்யூட்டு 2, ஸ்கைலாப் ,மீர் என அடுத்தடுத்த திட்டங்களின் மூலமாக உலகை அசர அடித்தது சோவியத். இதே பாணியில் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளும் தனித்தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் பணியினை மிகத்தீவிரமாக மேற்கொண்டனர். 

1998ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான், யூரோப், கனடா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பிறகு ஒவ்வொரு நாடாக இணைந்து தற்பொழுது 15 நாடுகள் இந்த விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எப்படி கட்டப்படுகிறது விண்வெளி நிலையம்? 

Image result for விண்வெளி நிலையம்

மொத்தம் 460 டன் எடையுடன் ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச விண்வெளி நிலையம். எவ்வளவு பெரிய கட்டுமானத்தை விண்வெளியில் கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்? இவை அத்தனையையும் ஒரே நேரத்தில் எடுத்துச் சென்றுவிட முடியாது கொஞ்சம் கொஞ்சமாக தான் எடுத்துச் செல்ல முடியும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து செல்லும் பொருட்களை ஒன்றாக இணைத்து இந்த பிரம்மாண்ட கட்டுமானத்தை மேற்கொள்ளும் பணியை தான் அங்கு தங்கியிருந்து விண்வெளி வீரர்கள் செய்கிறார்கள். இலட்சத்தில் ஒரு சதவிகித புவியீர்ப்பு விசை தான் இந்த விண்வெளி மையத்திற்கு இருக்கின்றது. ஆனாலும் மாதத்திற்கு இரண்டு கிலோமீட்டர் வரை பூமியை நோக்கி இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கீழே இறங்குகிறது. 

அதுமட்டுமின்றி ஒரு நாளைக்கு 15 முறை பூமியை சுற்றி வருகிறது இந்த விண்வெளி நிலையம். அது இந்த விண்வெளி நிலையம் ஒருமுறை பூமியை சுற்றி வருவதற்கு 96 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் வீரர்கள் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைதலையும் பார்க்கிறார்கள். அப்படி என்றால் எவ்வளவு வேகத்தில் இந்த விண்வெளி நிலையம் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. மேலும் இதனை தொடர்ந்து அதன் சுற்றுவட்டப்பாதையில் இருக்க வைப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த விண்வெளி நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் அதற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் கூட இந்த விண்வெளி நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சொல்லப்பட்டிருக்கிறது. 

இந்தியாவிற்கு எதற்கு விண்வெளி நிலையம்?

மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது விண்வெளித்துறையில் சற்று பின்தங்கிய நிலையில் இந்தியா இருந்தாலும் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடிகளில் அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட சர்வதேச விண்வெளி அமைப்புகள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த நிலையில் வெறும் 450 கோடி ரூபாய் செலவில் மங்கள்யான் திட்டத்தை செயல்படுத்தி சர்வதேச அளவில் ஈர்ப்பினை பதிவு செய்தது இந்தியா.  இது செவ்வாய்கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா செலவிட்ட தொகையில் வெறும் 11% தான்.

Image result for விண்வெளி நிலையம்

ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திராயன்-1 மூலமாக நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து உலகிற்கு தெரிவித்தது இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு. தற்பொழுது சந்திராயன் இரண்டின் மூலமாக தனது நிலவு குறித்த அடுத்த ஆராய்ச்சியும் தொடங்கவிருக்கிறது. மேலும் விண்வெளிக்கு வரும் 2022ம் ஆண்டிற்குள் மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் ககன்யான் திட்டத்தையும் மிக வெற்றிகரமாக செய்து வருகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் சர்வதேச நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பாக விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில் இந்தியாவும் அந்த முயற்சியில் இறங்க வேண்டிய மிக கட்டாயமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சர்வதேச போட்டியை நம்மால் சமாளிக்க முடியும். நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அடுத்தபடியாக விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு 2030ஆம் ஆண்டிற்குள் முழுமையடையும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார். இது சாத்தியம் ஆகும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலை மேலும் உயரும். அது பல்வேறு புதிய வாய்ப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு ஏற்படுத்தித் தரும். 

எனவே பெரும் முயற்சியில் இறங்க உள்ள இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close