Published : 03,Jun 2019 11:11 AM

“சட்டவிரோத பார்களை மூடுவதற்கு சட்டத்திருத்தம் வருமா?” - நீதிமன்றம்  

high-court-ask-question-to-tamilnadu-government-about-tasmac-bar

சட்டவிரோத பார்களை மூடுவதற்கு எப்போது சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதாவது டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ரசீது கொடுக்கப்படுவதில்லை. பார்கள் உரிமம் பெறாமல் நடத்தப்பட்டு வருவதாகவும் அடிப்படை வசதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் விதிமீறி செயல்படும் பார்களை மூட வேண்டும் எனவும் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் விசாரித்த போது 3326 பார்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அதற்கு தண்டனையாக அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அபராதத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் சட்ட விரோத பார்கள் மீதான தண்டனையை கடுமைப்படுத்த வேண்டும் எனவும் பிப்ரவரி 28 ஆம் தேதி உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று இதுகுறித்த விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது சட்ட முன்வடிவு மட்டும்தான் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் சட்டத்திருத்தமாக கொண்டுவரப்படும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தி 2 மாதகாலம் ஆகியும் ஏன் இன்னும் கொண்டுவரவில்லை. சட்டவிரோத பார்களை மூடுவதற்கு எப்போது சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்கவேண்டும் எனவும் தமிழக அரசுக்கும் மதுவிலக்கு ஆயத்துறை ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்