உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதபதி ஆர்.எம்.லோதாவிடமிருந்து ஆன்-லைன் மோசடியாளர்கள் ஒரு லட்சம் ரூபாயை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆர்.எம்.லோதா. ஓய்வு பெற்றுவிட்டார். இவரது நண்பர் பி.பி.சிங். இவரும் முன்னாள் நீதிபதி. இருவரும் இமெயிலில் அவ்வப்போது தகவல் பரிமாறிக்கொள்வது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, நீதிபதி சிங்கிடம் இருந்து அவருக்கு மெயில் வந்தது. அதில், தனது உறவினரின் அறுவை சிகிச்சைக்காக அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும் கீழ்கண்ட வங்கி கணக்குக்கு உடனடியாக பணம் அனுப்புமாறும் கேட்கப் பட்டிருந்தது.
உடனடியாக நீதிபதி சிங்கை, போனில் தொடர்பு கொண்டார் லோதா. லைன் கிடைக்கவில்லை. பின்னர் அதை உண்மை என்று நம்பிய அவர், குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு இரு தவணைகளாக தலா 50 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில், பி.பி.சிங்கை சந்தித்தார் லோதா. அப்போது, தனது இமெயில் ஹேக் செய்யப்பட்டு விட்டதை தெரிவித்த சிங், தான் பணம் கேட்டதாக தனது உறவினர்களுக்கு மெயில் சென்றதாகவும் தெரிவித்தார். அப்போது லோதா, தானும் பணம் அனுப்பியதாக சொல்ல, பிறகுதான் உண்மை தெரிய வந்தது.
பி.பி.சிங்கின், இ-மெயில் முகவரியை ஹேக் செய்த ஆன்-லைன் மோசடியாளர்கள், லோதாவை தொடர்பு கொண்டு, பணம் பறித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த லோதா, இதுபற்றி தெற்கு டெல்லியில் உள்ள மாளவியா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்