[X] Close

“ பொது வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் மாயாவதி”- அருண் ஜெட்லி விமர்சனம்

Mayawati-not-fit-for-Public-life--Arun-Jaitley

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பொது வாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் என்று, மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.


Advertisement

பிரதமர் நரேந்திர மோடி அருகில் தங்களது கணவர் செல்வதை பாரதிய ஜனதா பெண் தலைவர்கள் கூட விரும்ப மாட்டார்கள் என்றும், பிரதமரை போல தங்களை கணவர் கைவிட்டுவிடுவார் என்ற அச்சமே அதற்கு காரணம் என்றும் மாயாவதி கூறியிருந்தார். சர்ச்சைக்குரிய இந்த விமர்சனம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அருண் ஜெட்லி, மாயாவதியின் ஆளுமை, நெறிகள், பேச்சு ஆகியவை மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது என்று சாடியுள்ளார்.


Advertisement

பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மாயாவதி பேசியிருப்பதை பார்க்கும் போது பொதுவாழ்க்கைக்கு அவர் தகுதியில்லாதவர் என்பது தெரிவதாகவும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இதேபோல், அரசியல் தோல்வியை எதிர்நோக்கியுள்ளதாலேயே பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாயாவதியின் பேச்சு அதிர்ச்சியளிப்பதாகவும், தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Advertisement

Advertisement
[X] Close