Published : 28,Apr 2019 08:25 AM

8 பைக்குகளை தீவைத்து எரித்த மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை

The-police-are-searching-for-the-victims-who-burned-parked-vehicles-in-front-of-the-house-in-Salem

சேலத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு இருசக்கர வாகனங்களை தீவைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் நெத்திமேடு ஆண்டிக்கவுண்டர் காலனி பகுதியில் நெருக்கமான குடியிருப்புகளுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் வாகனத்தில் இருந்த பெட்ரோல் காரணமாக தீயை அணைக்க முடியாமல் போனது. பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் இருசக்கர வாகனங்கள் ஐந்து தீயில் எரிந்து நாசமானது. 

இதனிடையே அருகே உள்ள எஸ்.கே.கார்டன் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களுக்கும் மர்மநபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். நேற்று நள்ளிரவு மொத்தம் 8 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் மர்மநபர்கள் குறித்த அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படாமல் உள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்னதானப்பட்டி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களை திருட வந்தவர்கள் யாரேனும் எரித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்