Published : 23,Apr 2019 07:03 AM

பாஜகவில் சேர்ந்தார் இந்தி நடிகர் சன்னி தியோல்

Actor-Sunny-Deol-Joins-BJP

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் பாஜவில் இன்று சேர்ந்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல். முன்னாள் ஹீரோ தர்மேந்திராவின் மகனான இவர், காயல், கடார்: ஏக் பிரேம் கதா, தாமி னி, பார்டர் உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாயின. ஆனால், இவர் மறுத்து வந்தார். இந்நிலையில் பாஜக தலைவர் அமித்ஷாவை கடந்த வாரம் சந்தித்த போதும் இந்தச்  செய்தி கள் வெளியாயின.

அப்போது பேசிய அவர், ‘நான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. நான் அமித் ஷாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான்’’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் அவர் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இன்று  இணைந் தார். சன்னி தியோல், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.