[X] Close

திருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

Children-who-eat-ice-cream-at-the-festival-vomit-and-faint

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஐஸ் க்ரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

சீர்காழி அடுத்த வானகிரியில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இத்திருவிழாவில் ஐஸ் க்ரீம் வாங்‌கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. 


Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தைகளை மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 90 பேர் எனவும் அவர்கள் அனைவரும் 3-5 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் திருவிழாவில் இடம் பெற்றிருந்த 7 தனியார் ஐஸ் க்ரீம் கடைகளிலிருந்தும் மாதிரி ஐஸ்க்ரீம்களை சேகரித்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை வட்டாட்சியர் நேரில் சந்தித்து அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close