Published : 21,Apr 2019 07:25 AM

தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை !

TN-Election-chief-recommends-reelection-in-10-booth

தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இதனிடையே வாக்குப்பதிவின்போது சில வாக்குச்சாவடிகளில் சச்சரவும் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லியில் ஒரு வாக்குச்சாவடி, கடலூரில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தமாக 10 வாக்குச்சாவடிகள் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை வைத்தே, மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா..? இல்லையா என்பது தெரியவரும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்