[X] Close

‌மக்கள் நலனுக்காக ஜிஎஸ்டியில் மாற்றம் : பிரதமர் மோடி பேச்சு

Modi-Says-Change-in-GST-for-the-benefit-of-the-people

மக்களின் நலனுக்காகவே அவர்களுடைய ஆலோசனையைப்‌ பெற்று‌, ஜிஎஸ்டி ‌எளிமைப்படுத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்தார்.


Advertisement

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நாடு முழுவதும் பிரதமர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, கோவை கொடிசியா மைதானத்தில் அதிமுக, பாஜக கூட்டணியின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 


Advertisement

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழில் "வணக்கம்" என்றும் "‌மருதமலை முருகனுக்கு அரோகரா" என்றும் கூறி தனது உரையை மோடி தொடங்கினார். அப்போது‌, சிறு மற்றும் குறு தொழில்களை பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஒருபோதும் கைவிடாது‌. சிறு மற்றும் நடுத்தரத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் தேவையை ‌‌பாஜக அரசு நிறைவேற்றித் தரும் என்று அவர் குறிப்பிட்டார். 

மேலும் உங்கள் ஆலோசனைப்படியே ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்‌பட்டது‌‌, மக்களுக்கு பயன்படும் வகையில் ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், விசைத்தறித் தொழிலை மேம்படுத்த பாஜக அரசு உதவும். ‌‌நாடு முழுவதும் 2 லட்சம் விசைத்தறிகளில் மேம்படுத்தப்பட்டன. விசைத்தறித் தொழிலுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய் மானியம் அளிக்கப்பட்டதாக மோடி சுட்டிக்காட்டினார். மேலும் மேம்படுத்தப்பட்ட விசைத்தறிகளில் 60 ‌சதவி‌‌கிதம் தமிழகத்தைச் சேர்ந்தவை‌ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close