நிறுத்தி வைக்கப்பட்ட தொகுதிகளுக்கும் சேர்த்து, தற்போது 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்காசி தொகுதி மக்களவை வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து, சங்கரன்கோவிலில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''இடைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று, பெரும்பான்மை பலம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே, 4 தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்து, மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம்சாட்டினார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதால், தற்போது 22 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றும், இதுவே திமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் ஸ்டாலின் பேசினார்.
மத்தியில் மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்ட உடனே, தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இந்து மதம் பாஜகவுக்கு மட்டுமானது அல்ல என்று கூறிய ஸ்டாலின், தாங்கள்தான் இந்து மதத்தின் பாதுகாவலர் என்பது போல் பாஜகவினர் நினைத்துக் கொண்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். எந்த ஒரு ஜாதிக்கும், மதத்திற்கும் திமுக எதிரானது அல்ல என்றும் ஸ்டாலின் கூறினார்.
மத்தியில் மதச்சார்பற்ற நல்ல அரசு அமைய வேண்டும், எல்லா மதங்களையும் அரவணைக்கும் ஆட்சி அமைய வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி