[X] Close

வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஐதராபாத்- பஞ்சாப் அணிகள்: இன்று பலப்பரீட்சை

Today-IPL-between-Kings-XI-Punjab-and-Sunrisers-Hyderabad

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில், பஞ்சாப் அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 


Advertisement

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி, ஐதராபாத் அணிகள் தலா 5 போட்டிகள் விளையாடி உள்ளன. அவற்றில் 3 வெற்றிகள் 2 தோல்விகள் என இரண்டு அணிகளுமே 6 புள்ளிகளுடன் உள்ளன. பஞ்சாப் கடைசி போட்டியில் சென்னையிடமும், ஐதராபாத் அணி மும்பையிடமும் தோல்வியை தழுவியது.


Advertisement

அதன்படி முந்தைய போட்டிகளில் தோல்வி அடைந்த இவ்விரு அணிகளும் வெற்றி பாதைக்கு திரும்ப போராடும் என்பதால் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காயத்தால் முழு உடல் தகுதி எட்டாத ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் இப்போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சற்று தடுமாறுகின்றனர். கடைசி ஆட்டத்திலும் சென்னை அணி சுழற்பந்து வீச்சாளர்களை வைத்தே பஞ்சாப் அணிக்கு ஆட்டம் காட்டியது.


Advertisement

அதனால் இன்றைய போட்டியிலும் ஐதராபாத் அணி சுழற்பந்து வீச்சாளர்கள் பஞ்சாப் அணிக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள கெயில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடங்க கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த போட்டி மொகாலி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது


Advertisement

Advertisement
[X] Close