ஈரோடு மக்களவை தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வைகோ-வின் ம.தி.மு.க ஈரோடு தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளரான அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என வைகோ தெரிவித்தார். ஆனால் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படவில்லை. திமுக சின்னமான உதய சூரியனிலெயே போட்டியிடுவாரா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு மக்களவை தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் ''மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளோம்'' என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படியே, மதிமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்