மக்களவைத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய கட்சிகளாக அதிமுக மற்றும் திமுக ஆகியவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் இம்முறை மருத்துவர்கள், வழக்கறிஞர், பட்டதாரிகள் என ஏராளமானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு விடை சொல்லும் மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டிய பணிகளில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் மருத்துவர்கள் வேணுகோபால், ஜெயவர்தன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 7 வழக்கறிஞர்களுக்கும், 8 பட்டதாரிகளுக்கும் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வழக்கறிஞர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு முடித்தவர்கள் என 10 பேர் அதிமுகவிலிருந்து போட்டியிடுகின்றனர்.
திமுகவில் தமிழச்சி தங்கபாண்டியன், ஜெகத்ரட்சகன் போன்ற முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக கட்சிகளின் சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் பெரும்பாலும் பட்டப்படிப்பு முடித்தவர்களே வேட்பாளராக அறவிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!