[X] Close

தள்ளிப்போகிறது ரஜினியின் 2.ஓ ரீலிஸ்

2-o-release-date-postphoned

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் ரீலீஸ் தேதி அடுத்த ஆண்டிற்கு தள்ளிபோயுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜன.,25-ஆம் படம் திரைக்கு வரும் என திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ. 400 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமான வகையில் உருவாகி வருகிறது. எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக தயாராகும் 2.ஓ படத்தை வரும் தீபாவளியன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் உலக தரம் வாய்ந்த அளவில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதால் கூடுதல் காலம் தேவைப்படுவதாகவும், அதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி 2.ஓ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close