இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தூதரகம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. இதையடுத்து நேற்று காலை இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது.
இந்நிலையில் அபிநந்தனை விடுவிக்கக் கோரி அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. இதனையடுத்து இந்திய அரசும் தன் பங்குக்கு பாகிஸ்தானுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தத்தை கொடுத்தது. இதன் காரணமாகவே அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தூதரகம் உறுதியளித்திருப்பதாக தெரிகிறது.
Loading More post
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix