[X] Close

61 பந்தில் சதம் விளாசிய புஜாரா: இருந்தும் தோற்றது சவுராஷ்ட்ரா

Pujara-slams-maiden-T20-century-in-just-61-balls

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில், இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா, 61 சதம் விளாசினார்.


Advertisement

ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையே, சையத் முஷ்டாக் அலி கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன் று தொடங்கியுள்ள இந்த தொடர் மார்ச் 2 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடரில், இந்திய அணியில் இடம் பிடித்துள்ள முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்தூரில் இன்று நடந்த போட்டியில், உனட்கட் தலைமையிலான சவுராஷ்ட்ரா அணியும் அனிருத் சிங் தலைமையிலான ரயில்வேஸ் அணியு ம் மோதின. முதலில் பேட் செய்த சவுராஷ்ட்ரா அணியில், இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வீரர் புஜாரா அபாரமாக ஆடி, 61 பந்தில் 100 ரன்  விளாசினார். இதில் ஒரு சிக்சரும் 14 பவுண்டரிகளும் அடங்கும். ராபின் உத்தப்பா 31 பந்துகளில் 46 ரன் சேர்த்தார். இதையடுத்து நிர்ணயிக்கப் பட் \ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்தது.


Advertisement

பின்னர் 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ரயில்வேஸ் அணி, 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 190 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தார் 20 பந்தில் 49 ரன்னும் பிரதாப் சிங் 30 பந்தில் 40 ரன்னும் எடுத்து சிறப்பான தொடக் கம் கொடுத்தனர். அடுத்து அந்த அபினவ் தீக்‌ஷித் 30 பந்தில் 37 ரன்னும் ஹர்ஷ் தியாகி 7 பந்தில் 16 ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
 


Advertisement

Advertisement
[X] Close