[X] Close

அடாவடி விமான பயணிகளுக்கு அபராதம்

airindia-formulates-penalty-for-flight-delay

விமானப் பயணத்தை தாமதப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் பயணிகளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Advertisement

சமீபத்தில் ஏர் இந்தியா அதிகாரியை சிவசேனா எம்பி.ரவீந்திர கெய்க்வாட் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அடாவடி பயணிகளை வழிக்கு கொண்டுவருவது பற்றி விமான நிறுவனங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. அதன்படி, ஒரு பயணியால் விமானப் பயணம் ஒரு மணி நேரம் தாமதமானால், அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒரு மணி முதல் 2 மணி நேரம் வரை காலதாமதம் ஏற்படின், அதற்குக் காரணமான பயணிகளிடம் 15 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கலாமா? என்று ஏர் இந்தியா நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
Related Tags : air india delay flight penaltyair india delay flight

Advertisement

Advertisement
[X] Close