Published : 04,Feb 2019 04:28 PM

நாக சாதுக்களாக மாறிய இன்ஜினியர்கள் உள்பட 10,000 பேர்..!

Over-10-000-including-engineers--management-grads-become-Naga-sadhus

கும்பமேளா நிகழ்வில் பொறியாளர்கள், மேலாண்மை பட்டதாரிகள் என கிட்டத்தட்ட 10,000 பேர் நாக சாதுக்களாக மாறியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15ம் தேதி கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. கும்பமேளாவில் நீராடுவதற்காக பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் நாக சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் குவிந்து வருகின்றனர். இதன்படி நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வில் பொறியாளர்கள், மேலாண்மை பட்டதாரிகள் என கிட்டத்தட்ட 10,000 பேர் நாக சாதுக்களாக மாறியுள்ளனர். இதற்கான தங்களின் இல்லற வாழ்க்கையை துறந்து, முடிகளை வெட்டி முறைப்படி நாக சாதுக்களாக மாறியுள்ளனர். நாக சாதுக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை துறந்து துறவிகளாக வாழக்கூடியவர்கள். பெரும்பாலும் கும்பமேளா நிகழ்வில் ஒன்றாகக் கூடுவார்கள். இந்நிலையில் தற்போதைய கும்பமேளாவில் ஆண்கள், பெண்கள் என கிட்டத்தட்ட 10,000 பேர் நாக சாதுக்களாக மாறியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்