Published : 30,Jan 2019 08:52 AM

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகும் ஓ.பி.எஸ் !

O--Panneerselvam-attends-Arumugaswamy-s-enquiry-commission

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் ஆஜராகவுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள்,அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன்,சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் என இதுவரை 145 பே‌ரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.  

Related image

இந்நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி அதாவது நாளை மறுநாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இதனால் அன்றைய தினமே அவரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய நபராக இருப்பார் என்றும் கருதப்படுகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்