[X] Close

மனைவி செய்தது கொலை அல்ல: ‘விலைமாதர்’ என கூறிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

Wife-Killed-Husband--SC-new-Order

விலைமாதர் என கூறிய கணவனை மனைவி கொலை செய்த வழக்கில் புதிய திருப்பமாக, அதனை கொலையாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவன், மனைவியையும், மகளையும் விலைமாதர் என திட்டியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கொலைசெய்துள்ளார். இந்த வழக்கில் தண்டனையை குறைக்க கோரி மனைவி மேல்முறையீடு செய்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கணவனே, விலைமாதர் என கூறுவதை, குறிப்பாக மகளையும் அந்த வார்த்தை கொண்டு திட்டுவதை எந்த இந்திய பெண்ணும் விரும்பமாட்டார் என தெரிவித்தது.


Advertisement

விலைமாதர் என அவர் கூறிய அந்த வார்த்தை தான் அவரை கொலை செய்ய தூண்டியதாகவும் இதனை கொலை என கருதமுடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தண்டனையும் 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.


Advertisement

Advertisement
[X] Close